snoring-issue

Snoring issue...

Oct 28 2017 18:24:23 PM

குறட்டை என்பது தூங்கும் போது ஏற்படும் ஒரு நோய்தான். இந்த வியாதி வந்தவர்களுக்கு ஒன்றும் தொல்லை கொடுக்காது, ஆனால் அவரை சார்ந்தவர்களை மிகவும் எரிச்சல் அடைய செய்துவிடும். 

குறட்டை விடும் பிரச்னை விவாகரத்து வாங்கம் அளவிற்கு எரிச்சலை உண்டாக்குவதாக அமைந்துள்ளது. இந்த குறட்டையை வியாதிக்கு அதிகப்படியானோர் மருத்துவரை அணுகி ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் பெறுகின்றனர். 

குறட்டை என்பது சுவாசக்காற்று மூக்கின் வழியாக செல்லாமல், சளி, மது அருந்தும் பழக்கம், புகைப்பிடித்தல், வயது முதிர்ச்சி, சுவாப்பாதையில் உள்ள கோளாறுகள் போன்ற காரணங்களால் வாய் வழியாக செல்வதால் ஏற்படுகிறது. இந்த சத்தம் நாளடைவில் அதிகமாக கேட்கும் போது குறட்டையின் இம்சை அதிகரிக்கிறது. அத்துடன் குறட்டை நோயால் பாதிப்படைந்தவர்களுக்கு நாளடைவில், சோர்வு, மன உளைச்சல் மற்றும் இதய நோய்களும் ஏற்படுகிறது.

இந்த குறட்டை தொல்லையில் இருந்து விடுபட நினைப்பவர்கள், முதலில் மதுப்பழக்கத்தை விட வேண்டும். உணவுப்பழக்கங்களில் செரிமாணத்திற்கு எளிதாவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். உறங்கும் போது ஒரே பக்கத்தில் உறங்காமல், தூக்கத்தில் விழிக்கும் போது புறண்டு படுப்பது நல்லது. இந்த நடைமுறைகளை சிறிது காலத்திற்கு மேற்கொண்ட பிறகு, நாட்டு மருத்துக்கடைகளில் கிடைக்கும் ஓமத்தைலம் அல்லது கற்பூரவல்லித்தை வாங்கி அதனுடன், பச்சைக்கற்பூரத்தை சேர்க்க வேண்டும்.

பின்னர் குறட்டையுடன் தூங்குபவர்கள் அதனை சுவாசிக்கும் படி மூக்கின் அருகே கொண்டு சென்று வைக்க வேண்டும். அப்போது அந்த வாசனை மூக்கின் வழியே உள்ளே சென்று, சுவாசக்கோளாறுகளை சரிசெய்யும். இதனால் குறுகிய காலத்திலேயே குறட்டை பிரச்னையில் இருந்து விடுபடலாம். 

குறிப்பு: 

இந்த மருத்தை மூக்கு மற்றும் வாயில் படாதவாறு பார்த்துக்கொள்ளவும். 

பிறவி குறைபாடு காரணமாக சிறுவயது முதலே குறட்டை விடும் வியாதி உள்ளவர்கள் இதனை மேற்கொள்ளமால், முதலில் மருத்துவரை அணுகுவது நல்லது.

Advertisement :
comments

Feedback