ttv-dinakaran-strongly-condemned-admk

TTV Dinakaran strongly condemned ADMK

Jul 18 2018 16:04:40 PM

இன்று ஆர்.கே.நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்க்காக சென்ற அப்பகுதி  சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் ஆதரவாளர்களுக்கும் அதிமுக தொண்டர்களுக்குமிடைய கடும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் பரஸ்பரம் தாக்கி கொண்டதில் சிலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், தான் ஆர்.கே.நகர் சட்டமன்ற அலுவலகத்துக்கு வருவதை கண்டு மதுசூதனன் அடியாட்கள் தான் தாக்குதலில் ஈடுபட்டனர் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார்.

மேலும் ஆர்.கே.நகரில் எந்த நலத்திட்ட உதவிகளும் தான் செய்யக்கூடாது என ஆளும்கட்சி இது போன்ற சதிகளை செய்து வருவதாகவும். கல்லெறிந்தவர்கள் மீது உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து காவல்துறையினர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். பிரச்சனையில் ஈடுபட்டவர்கள் குறித்த வீடியோ ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்போவதாகவும் தினகரன் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்விக்கு பதிலளித்த பேசிய அவர் ஜெயலலிதா அவர்கள் ஆட்சி காலத்தில் சட்ட ஒழுங்கு கட்டுக்குள் இருந்தது  என்றும் இந்த ஆட்சியில் சட்ட ஒழுங்கு கட்டுக்குள் இல்லை என கூறிய அவர் “பேய்கள் ஆட்சி செய்தால் பிணங்களை கழுகு தின்னும்”, என விமர்சித்தார்.

Advertisement :
comments

Feedback