tamizhisai-is-not-an-economist-cpm-balakrishnan-criticize

Tamizhisai is not an economist - CPM Balakrishnan criticize

Jul 18 2018 16:46:54 PM

விருதுநகரில் சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப்பேசினார் அப்போது 8 வழிச்சாலை குறித்த தமிழிசை கருத்துக்கு பதிலளித்து பேசிய அவர்

தமிழகத்தில் 8 வழிச்சாலை ஏற்பட்டால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று கூறுவதற்கு தமிழிசை ஓன்றும் பொருளாதார நிபுணர் அல்ல என்று கூறினார்.

மேலும். 8 வழிச்சாலை திட்டம் மத்திய மாநில அரசுகள் கொள்ளையடிக்கவே அமைக்கப்படுகிறது என்று கூறிய பாலகிருஷ்ணன் தமிழிசை, ரஜினிகாந்த் போன்றவர்களெல்லாம் எடப்பாடிக்கு வக்காலத்து வாங்கி வழிமொழிகிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து காவிரி ஆணையம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை மாதம் சரிவர பெற்றுத்தர வேண்டும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Advertisement :
comments

Feedback