banks-going-to-be-closed-for-six-days-don-t-panic

banks going to be closed for six days? Don't panic

Aug 31 2018 06:49:17 AM

வங்கிகள் ஆறு நாட்களுக்கு இயங்காது என்றும் ஏடிஎம்கள் காலியாகி காசுக்கு அவஸ்தைப் பட வேண்டியது வரும் என்றும் பீதியளிக்கும் ஒரு மெசேஜ் வாட்ஸ்அப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறது. 
வருகிற 2ம் தேதி ஞாயிறு அதனால் வங்கி விடுமுறை. அடுத்த நாள் ஜென்மாஸ்டமி அதனால் விடுமுறை. அடுத்து நான்கு ஐந்தாம் தேதிகளில் வங்கிப் பணியாளர்கள் பென்சன் உள்ளிட்ட நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் இறங்குகிறார்கள். அதனால் அந்த இரண்டு நாட்களும் வங்கிகள் இயங்காது. அடுத்து 6,7ம் தேதிகள் மட்டும் ஏதோ பரவாயில்லை என்று வங்கிகள் இயங்கும். அடுத்து 8,9 சனி, ஞாயிற்றுக் கிழமைகள் என்பதால் அப்போதும் விடுமுறை. எனவே உஷார் என்றும் இந்தத் தகவலை அனைவருக்கும் பகிருங்கள் என்றும் சொல்கிறது அந்த வாட்ஸ்அப் செய்தி. அது ஆங்கிலத்தில் இருப்பதால் அது உண்மை என்று நம்பும் ஒரு கூட்டம் இருக்கிறது. உண்மை என்ன?
2ம் தேதி ஞாயிறு விடுமுறைதான் சந்தேகமில்லை. 
3ம் தேதி ஜென்மாஸ்டமிக்கு அரசு விடுமுறை இல்லை. எனவே அது ஃபேக்.
அடுத்து 4,5ல் வங்கிப் பணியாளர்கள் ஸ்ட்ரைக். இதுவும் பெரிததாக வங்கி வேலைகளைப் பாதிக்கும் என்று சொல்ல முடியாது. வங்கிகள் பூட்டியிருக்கப் போவதில்லை. ஏனெனில் அந்த ஸ்ட்ரைக் அறிவிப்பு ரிசர்வ் வங்கிப் பணியாளர்களுக்கு. 4, 5ம் தேதிகளில் பென்சன் விவகாரம் உள்ளிட்ட தங்களின் நீண்ட காலக் கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டாக விடுப்பு எடுப்பது என்று ரிசர்வ் வங்கி ஊழியர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. அவர்கள் அப்படியே லீவு எடுத்தாலும் அதன் பாதிப்பு நாம் அன்றாடம் பயன்படுத்தும் வங்கிகளைப் பெரிதாகப் பாதிக்காது. அடுத்தது ஏடிஎம் வறட்சியாகிவிடும் என்பதும் நம்பக் கூடியதல்ல. 

Advertisement :
comments

Feedback