nitin-on-bjp-and-dmk

Nitin on bjp and dmk

Aug 31 2018 07:15:01 AM

சென்னையில் நடந்த கருணாநிதி புகழஞ்சலிக் கூட்டத்தில் பாஜகவுக்கும் திமுகவுக்கும் நிறைய ஒற்றுமை இருப்பதாகச் சொல்லி அங்கு வந்திருந்தவர்களை அதிர வைத்தார்.
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கருணாநிதியைப் புகழும் போது மனிதர்களின் சிறப்புகளை அவரின் கடின உழைப்பை வைத்துத்தான் மதிப்பிட முடியும் என்று சொன்னார். அதற்கு வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனைய உயர்வு என்ற குறளைச் சொன்னார்.
பாரம்பரியத்தைப் பாதுகாப்பது உட்பட பல்வேறு வகையில் பாஜக கொள்கைகளுககும் திராவிடக் கொள்கைகளுக்கும் நிறைய ஒற்றுமை இருப்பதாகவும் நிதின்கட்கரி தெரிவித்தார். உலகப் பொதுமுறை கொடுத்த திருவள்ளுவருக்கு சிலை அமைத்து திருக்குறளை அழிவு இல்லாத செல்வமாக மாற்றியவர் கருணாநிதி என்று கூறிய கட்கரி, திருவள்ளுவரை திமுகவும் கொண்டாடுகிறது. பாஜகவும் கொண்டாடுகிறது என்றார்.


இந்தக் கூட்டத்தில் பேசிய தலைவர்கள் பலர் பாஜக எதிர்ப்பு அரசியலைப் பேச, நிதின் கட்கரி கருணாநிதியைப் புகழ நெருக்கடி நிலை விஷயத்தை எடுத்துக் கொண்டார். நெருக்கடி நிலையின்போது, ஜனநாயகத்தை காப்பதில் இந்திய அளவில் தனது பெரிய பங்களிப்பை வழங்கியவர் கருணாநிதி. அவசர நிலை பிரகடனத்தை முதல் முதலில் எதிர்த்தது கருணாநிதி தலைமையிலான தமிழக அரசுதான். அவசர நிலை பிரகடனத்தின் போது பாரதீய ஜன சங்கத்துடன் அவர் இணைந்து செயல்பட்டார். மத்தியில் கூட்டணி அரசை உருவாக்குவதில் முன்னோடியாக கருணாநிதி திகழ்ந்தார். 1999-ம் ஆண்டு அமைந்த வாஜ்பாய் தலைமையிலான மத்திய ஆட்சியில் சிறந்த தோழமை கட்சி தலைவராக கருணாநிதி விளங்கினார். வாஜ்பாயுடன் நல்ல நட்புறவுடன் இருந்தார் என்று நிதின் கட்கரி கூறினார்.

Advertisement :
comments

Feedback