to-moon

To Moon

May 30 2018 09:13:26 AM

அமெரிக்காவின் நாசா நிலாவில் குடியேறலாம் எனும் ஆர்வத்தை ஏற்படுத்திய நாள்ல இருந்து மக்களிடம் அதற்கான ஆர்வம் கூடிக் கொண்டே போகிறது.

நிலாவில் குடியேறும் திட்டத்திற்கான ஆராய்ச்சியை நாசா நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் தீவிரப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இதற்காக தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களோடு சேர்ந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள நாசா முன்வந்திருக்கிறது.

ரோபோக்கள் மூலம் நிலவின் மேற்பரப்பில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்ச்சி செய்ய நாசா தயாராகி விட்டது. கமர்சியல் லூனார் பேலோட் சர்விஸ் (CLPS ) எனும் பெயரில் வரும் 2019- ஏப்ரல் மாதத்தில் முதல் ஆராய்ச்சியை நாசா தொடங்க போகிறது. இந்த ஆய்வின் முக்கிய நோக்கமே, மனித உயிர் வாழ்வதற்கான அடிப்படை சாத்திய கூறுகள் நிலவில் உள்ளதா என்று ஆராய்வதுதான். நிலவின் நிலப்பரப்பில் உள்ள ஆக்சிஜனின் அடர்த்தி,நிலப்பரப்பின் கீழ் ஹைட்ரஜன் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் போன்றவை முக்கிய ஆய்வுகளையு மேற்கொள்ளப் போகின்றனர்.

இதோடு இன்னொரு முக்கியமான ஆய்வும் நடக்கப் போகிறது. நிலவின் துருவங்களில் இருக்கும் உரைநிலை தண்ணீரை ராக்கெட்டுக்கான எரிபொருளாகப் பயன்படுத்தும் ஆராய்ச்சி அது.

அது வெற்றி அடைந்தால் பூமியில் இருந்து நிலாவுக்கு சென்னையில் இருந்து கூடுவாஞ்சேரிக்குப் போய் வருவது போல் அடிக்கடி போய் வரலாம். அனேகமாக வரும் 2022 ஆம் வருடம் சோதனை ஓட்டம் நடத்த நாசா திட்டம் போட்டிருக்கிறது(எவன்லாம் சிக்க போறானோ....!) இருக்கிற பூமிய நாசப்படுத்திட்டு இன்னொன்றைத் தேடிப் போறாங்க... பாவம் நிலா.. அதை என்ன பாடு படுத்தக் காத்திருக்கிறானோ மனிதன்.

- ராய்-

Advertisement :
comments

Feedback