what-is-biology

what is biology?

Sep 23 2018 07:58:09 AM

உயிரியல் என்று தமிழில் சொல்லலாம். உயிரினங்கள் பற்றிய படிப்புத்தான் உயிரியல். செல், ஜீன்ஸ், நுண்ணுயிரிகள், தாவரங்கள், விலங்குகள், மனித உடல் என்பவை பற்றிப் படிக்கும் படிப்பு. உயிரியல் படிப்பில் பல்வேறு வகையான பிரிவுப் படிப்புகள் உள்ளன. உயிர்ச்சூழலியல் (Ecology) வேளாண்மை (Agriculture),உயிர்வேதியியல் (Biochemistry),தாவரவியல் (Botany),உடலியங்கியல் (Physiology),விலங்கியல் (Zoology) என்று பல்வேறு வகைப் படிப்புகள் உள்ளன.

இதில் உயிர்ச்சூழலியல் என்பது உயிர்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் இடையே உள்ள உறவு குறித்த படிப்பு.

வேளாண்மைப் படிப்பு நமக்குத் தெரியும். பயிர்களைப் பற்றியும் அது வளரும் நிலத்தைப் பற்றியுமான படிப்பு.

உயிரிகளில் உள்ள வேதிப் பொருட்கள் மற்றும் வேதிப் பொருட்கள் உடலில் என்ன தாக்கத்தைச் செலுத்தும் போன்றவற்றைப் பற்றிய விரிவான படிப்பு உயிர்வேதியியல்

தாவரவியல் என்பது தாவரங்களைப் பற்றிய படிப்பு. 

உடலியங்கியல் என்பது உயிரிகள் எப்படி இயங்குகின்றன என்பதைப் பற்றியது.

விலங்கியல் விலங்குகளைப் பற்றிய படிப்பு.

உயிரியல் என்பது அடிப்படையான மூன்று விஷயங்களைப் பற்றி விரிவாகப் படிக்கிறது.

முதலாவது செல். உயிரியின் அடிப்படையான விஷயம் செல்தான். ஒவ்வொரு உயிரினமும் தாவரத்தில் இருந்து, விலங்குகள் வழியாக மனிதன் வரையில் ஒவ்வொரு உயிரினமும் இந்த செல்களால் ஆனவை. இந்த செல்கள்தான் அவற்றை இயக்குகின்றன. அமீபா போன்ற ஒரு செல் உயிரியில் இருந்து (அதற்கு ஒரே ஒரு செல்தான்) லட்சக்கணக்கான செல்களை உடைய மனிதன் வரையில் படிக்கிறது உயிரியல்.  

அடுத்தது ஜெனட்டிக்ஸ் எனப்படும் மரபியல். உயிரியானது தனது குணாம்சங்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவது தொடர்பானது. அப்பாவோட குணம் அப்படியே அவனுக்கு இருக்கிறது. அம்மாவ அப்படியே உரிச்சு வச்சிருக்கா என்றெல்லாம் சொல்கிறோமே அது இதுதான். 

அடுத்தது ஹோமோஸ்டாசிஸ் எனப்படும் சீர்ச்சமநிலை. அதாவது உடலில் எவ்வளவு வெப்பம் இருக்க வேண்டும். எவ்வளவு தண்ணீர் இருக்க வேண்டும். எவ்வளவு காற்று இருக்க வேண்டும் போன்ற விஷயங்களை தானாவே உயிரானது முடிவு செய்து அதற்கேற்றார்போல் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறதல்லவா அது. ஒரு நார்மலான உடலில் 98.6 டிகிரி வெப்பம் இருக்கிறதல்லவா? 

உயிரற்ற பொருளுக்கும் உயிருக்கும் அதுதான் வேறுபாடு. உயிரற்ற பொருளை நாம்தான் இயக்க வேண்டும். ஒருமேசையை நாற்காலியை பேனாவை பென்சிலை நாம் நகர்த்தினால்தான் நகரும். அதற்குரிய சக்தியை அது தானாகப் பெற்றுக் கொள்வதில்லை. ஆனால் உயிர் அப்படி அல்ல. தனக்குரிய சக்தியை அதுவே பெற்றுக் கொள்கிறது. தானாகவே
இயங்குகிறது.

மூன்றாவது எனர்ஜி எனப்படும் சக்தி: ஒவ்வொரு உயிரும் தான் இயங்குவதற்குரிய சக்தியைத் தானே பெற்றுக் கொள்கிறது. உழைச்சு சாப்பிடுவது என்பது இதுதான். தானா உழைச்சு தானா சம்பாதிப்பது உயிரின் இயல்பு. அதை மீறிச் செயல்படும் சோம்பேறிகள் வாழ்வதற்கு லாயக்கற்றவர்கள் என்பதை சொல்லாமல் சொல்கிறது. உதாரணமாக தாவரம்
தனக்குத் தேவையான சக்தியை சூரிய ஒளியில் இருந்து தானே பெற்றுக் கொள்கிறது. 

--தொடர்ந்து பார்ப்போம்

Advertisement :
comments

Feedback