help-to-poor

Help to Poor

Jun 01 2018 10:48:58 AM

10ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற ஏழை மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் உதவி செய்து வருகிறது சரோஜினி தாமோதரன் நிறுவனம். இந்த ஆண்டும் அந்த நிறுவனம் உதவி செய்யக் காத்திருக்கிறது. 

விண்ணக்கத் தகுதி
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
உடல் ஊனமுற்றவராக இருந்தால் 75 சதவீதம்.
குடும்த்தின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி 
www.vidyadhan.org எனும் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கடைசித் தேதி
30 ஜூன் 2018
சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு தொடர்பு கொள்ள:
மின்னஞ்சல்: vidyadhan.tamilnadu@sdfoundationindia.com
7339659929 என்ற எண்ணில் ஜேக்கப் என்பவரைத் தொடர்பு கொண்டு பேசலாம்.

சரோஜினி தாமோதரன் நிறுவனம் ஷிபுலால் மற்றும் S.D.ஷிபுலால் ஆகியோரால் 1999ல் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் ஆலப்புழ, கேரளாவில் உதவிப்பணம் கொடுக்க ஆரம்பித்து தற்போது கல்வி, நெஞ்சுப்பைகுரிய மேற்பார்வை, ஓய்வூதிய திட்டம், ஊட்டசத்து, இயற்கை விவசாயம், கலை மற்றும் கலாச்சாரம் போன்ற பல துறைகளில் உதவி அளிக்கிறது. இயற்கை விவசாயத்திற்கு அக்ஷயஸ்ரீ எனும் விருதை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. வித்யா ரக்க்ஷம் என்னும் புதிய திட்டத்தை முதியோர்களுக்காக தொடங்கி நடத்தி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஏழை மாணவர்களுக்கு கல்வி பெறும் உரிமையக் கொடுத்துவருகிறோம் என்றும் கல்வியை ஒருவரது வாழ்வின் கடவுச்சீட்டு என்று நம்புகிறோம் என்றும் கூறுகிறது இந்த நிறுவனம்.
 

Advertisement :
comments

Feedback