higher-heart-disease-risk-in-early-baldness

higher heart disease risk in early baldness

Nov 30 2017 17:01:13 PM

இளநரை அல்லது சின்ன வயதில் முடி உதிர்ந்து வழுக்கை விழுவது இதயக் கோளாறுகளுக்கான அறிகுறியாக இருக்கலாம் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இந்தியாவில் உள்ள 2000 இளைஞர்களிடம் நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. ஐரோப்பிய சொசைட்டி ஆப் கார்டியாலஜி இந்த ஆய்வை மேற்கொண்டது. 

இது குறித்து பிரிட்டீஸ் ஹார்ட் பவுண்டேஷன் இயக்குனர் டாக்டர் மைக் நாப்டன் கூறுகையில், இந்தஆய்வு இளநரை மற்றும் சிறு வயதில் முடி உதிரும் நபர்களுக்கு இதயக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகத் தெரிவித்தார். 

எனினும் நமது உணவு முறை மற்றும் பயிற்சிகள் மூலம் கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை அதிகமாகாமல் பார்த்துக் கொள்பவர்களுக்கு இந்தப் பிரச்னை இல்லை என்று மைக் நாப்டன் கூறியிருக்கிறார்

Advertisement :
comments

Feedback