ginkgo-biloba-to-prevent-heart-attack

Ginkgo biloba to prevent heart attack

Dec 20 2017 18:38:27 PM

பெயரைக் கேட்ட உடனேயே லேசாக மாரடைப்பு வருவதைப் போல தெரிகிறதா... அது ஒன்றுமில்லை ஒரு மூலிகைச் செடி. இப்போ விஷயத்தைப் படியுங்கள்.

ஜிங்க்கோ பிலோபா என்னும் ஒருவகை மூலிகைச் செடி மூலம் மூளை மற்றும் இதயத்தில் ஏற்படும் தாக்கத்தை கட்டுப்படுத்தி மாரடைப்பை சரி செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இதயத்தின் பகுதிகளுக்குக் குருதியோட்டம் தடைப்படும்போது இதயத்திசு இறப்பு அல்லது இதயத்தசை இறப்பு (Myocardial infarction) ஏற்படுகிறது. இது பெரும்பாலும் முடியுருத் தமனியில் தடையோ குறுக்கமோ ஏற்படுவதால் உண்டாகிறது. இத் தமனிகளின் சுவர்களில் கொலஸ்டிரால் போன்ற கொழுப்புப் பொருட்களும் வெள்ளைக் குருதி அணுக்களும் சேர்ந்து உட்புறத்தில் வீக்கத்தழும்பு உருவாவதால் தமனி குறுகிவிடுகின்றது. 

நைட்ரேட்டு மாத்திரைகள் எனப்படும் உயிர்வாழ் மாத்திரைகள் சாப்பிடும் போதும் இதய குருதியோட்டம் சீரடைந்து இந்த வலி குறையும். இந்த நிலைக்கான மருத்துவ உதவியை உரிய காலத்தில் தராவிட்டால் வீக்கத்தழும்பு வெடித்து குருதிக்குழாய்களுள் குருதி உறைந்து குழலியக்குருதியுறைமை ஏற்பட்டு நிரந்தரமான அடைப்பு உண்டாகி மரணம் சம்பவித்து விடுகிறது.

இதய நோய் உள்ளவர்கள் உயிர்காக்கும் மாத்திரைகளையே நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது. இதனை கவனத்தில் கொண்டு ஜிங்க்கோ பிலோபா (ginkgo biloba) என்றும் ஒரு இயற்கை தாவரத்தைக் கண்டறிந்து அதன் மருத்துவ குணங்களை ஆராந்துள்ளனர் மருத்துவக்குழுவினர். 

லண்டன் மருந்தகங்களில் இந்த இயற்கை தாவரத்தின் சாற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகள் விற்பனை செய்யப்பகின்றன. 
சீனாவில் மாரடைப்பு மற்றும் இரத்தஓட்ட குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 330 நோயாளிகளுகள் 6 மாதங்களுக்கு மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 

இவர்களில் ஒருபகுதியினருக்கு 450 மில்லிகிராம் ஜிங்க்கோ பிலோபா மருந்தும் 100 மி.கி. ஆஸ்பிரின் மருந்தும், மறுபகுதியினருக்கு ஆஸ்பிரின் மருந்து மட்டும் கொடுக்கப்பட்டது.

ஆஸ்பிரின் மருந்து மற்றும் ஜிங்க்கோ பிலோபா மருந்தும் உட்கொண்ட நோயாளிகளின் மூளை செயல்பாடு, இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம், ஞாபகசக்தி ஆகியவை சற்று வளர்ச்சி அடைந்திருந்தன. 

வெறும் ஆஸ்பிரின் மாத்திரைகள் இயல்பான வளர்ச்சியை அல்லது பாதுகாப்பை மட்டுமே அளித்திருந்தன என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதயத்திற்குக் கிடைத்த இயற்கையும் செயற்கையும் இணைந்த மருத்துவம் என்று இதயபாதிப்பு கொண்ட நோயாளிகள் தற்போது ஜிங்க்கோ பிலோபா தாவரத்தைக் கொண்டாடுகிறார்கள்.

இதன்பின்னர் அவர்கள் சீனாவின் நாஞ்ஜிங் மருத்துவப்பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இவர்களின் இதயம் மற்றும் மூளை குறித்த முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 

Advertisement :
comments

Feedback