admk-can-not-accept-bjp-comments-thambidurai

ADMK can not accept BJP comments : Thambidurai

Jul 13 2018 15:32:20 PM

இன்று கரூரில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்துப்பேசினார். அப்போது கேள்வியொன்றிற்கு பதிலளித்து பேசிய அவர் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்க 5 இடங்களை அம்மா தேர்ந்தெடுத்தார்கள்.  ஆனால் அதை பிரதமர் மூன்றான்டுகளுக்கு மேலாக செயல்படுத்தாமல் இருக்கிறார் என்று குற்றம் சாட்டினார். மேலும் நீட் தேர்வு மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என்றும் தெரிவித்தார். ஒரு மொழி, ஒரு வரி, ஒரு தேர்தல் என்பதை கையில் வைத்துக் கொண்டு மத்திய அரசு நம்மீது திணித்து வருவதாகவும் எனவே இதை எதிர்த்து தமிழக மக்களை திரட்டி போராடுவோம் என்றும் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் தீவிரவாதம் பரவி வருவதாக அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறிய கருத்துக்கு பதிலளித்த அவர், தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்வியெழுப்பினார். தொடர்ந்து ஐந்து லட்சம் கோடி தமிழகத்திற்கு வழங்கியிருப்பதாக அமித்ஷா கூறியதற்கு, தமிழகம் சார்பில் 20 லட்சம் கோடி கொடுத்துள்ளதாகவும், ஆனால் இன்னும் உள்ளாட்சிகளுக்கு தரவேண்டிய  இரண்டு ஆயிரம் கோடி மத்திய அரசு வழங்கவில்லை என்றும் தம்பிதுரை தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பாஜக தலைவர்கள் அதிமுக குறித்து கூறும் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

Advertisement :
comments

Feedback