omni-buses-vs-goverment-buses

omni buses Vs Goverment buses

Jul 20 2018 09:21:49 AM

தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு இணையாக சொகுசு பேருந்துகளை அரசு போக்குவரத்து கழகம் (எஸ்.இ.டி.சி.) இயக்கி வருகிறது. அதன்படி சென்னை கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்கள் உள்பட அனைத்து ஊர்களுக்கும், ஆந்திரா,கர்நாடக போன்ற வெளிமாநிலங்களுக்கும் அரசு ஏ.சி. படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் தினசரி இயங்கி வருகின்றன.

அதன்படி தற்போது ஆம்னி பேருந்துகளுக்கு போட்டியாக சென்னை எழும்பூரிலிருந்து அரசு ஏ.சி படுக்கை வசதி பேருந்துகள் இயக்கப்படுகிறது. முதற்கட்டமாக எழும்பூரிலிருந்து நெல்லை, போடி, கரூர் மாவட்டங்களுக்க்கு இயக்கப்படவிருக்கிறது. அதற்கான முன்பதிவு சேவையும் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து போடி, கரூர் ஆகிய ஊர்களுக்கு அரசு ஏ.சி.படுக்கை வசதி பேருந்துகள் புறப்படும் இடமும், கோயம்பேட்டில் இருந்து எழும்பூர் ரெயில் நிலையம் அருகே மாற்றம் செய்யப்பட்டது. இங்கிருந்து கடந்த 4 தினங்களாக அடையாறு, ஓ.எம்.ஆர். சாலை, வேளச்சேரி, தாம்பரம் மார்க்கமாக போடிக்கு இரவு 8.30 மணிக்கும், கரூருக்கு 9.30 மணிக்கும் அரசு ஏ.சி.படுக்கை வசதி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் எழும்பூர் ரெயில் நிலையம் எதிரில் இருந்து நேற்று முன்தினம் முதல் நெல்லைக்கும் ஏ.சி. படுக்கை வசதி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இரவு 9 மணிக்கு இயக்கப்படும் இந்த பேருந்து எழும்பூரில் இருந்து புறப்பட்டு கோயம்பேடு, அசோக்நகர், கத்திபாரா, தாம்பரம் மார்க்கமாக திருநெல்வேலி செல்கிறது. மேலும் சென்னை எழும்பூரிலிருந்து நெல்லை, போடி, கரூருக்கு செல்லும் அரசு ஏ.சி. படுக்கை வசதி பேருந்துகளுக்கான முன்பதிவு சேவையும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

Advertisement :
comments

Feedback