amitsh-avoided

amitsh avoided

Aug 31 2018 07:58:39 AM

சென்னையில் நடந்த கருணாநிதி புகழஞ்சலிக் கூட்டத்தில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்ட பாஜக தலைவர்களை அழைத்திருந்த போதிலும், வந்திருந்த மற்ற தலைவர்களெல்லாம், மத்தியில் உள்ள பாஜக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்கள். அவர்கள் விமர்சித்த போது, நிதின் கட்கரி உட்பட பாஜக தலைவர்கள் யாரும் அங்கு இல்லை. எல்லோரும் கிளம்பிப் போயிருந்தார்கள்.

காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் பேசும்போது, ஊடகத்தின் மூலம் ஜனநாயகத்தின் சட்டங்கள் முடக்கப்படுகின்றன. அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையைவிட நாட்டின் தற்போதைய நிலை மோசமாக உள்ளது என்றார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. டெரிக் ஓ பிரையன், “நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும். பா.ஜ.க.வுக்கு எதிராக மேடையில் இருப்பவர்கள் அனைவரும் கூட்டணி அமைக்க வேண்டும். பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும். நாங்க ரெடி, நீங்க ரெடியா?. மத்தியில் ஆட்சியை பிடிக்கும் காலம் வெகுதூரம் இல்லை” என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தற்போது பன்முகத் தன்மையை அழிக்கும் வகையில் கல்வியில் கூட ஒரே மத சித்தாந்தத்தை புகுத்தும் போக்கு நடந்துகொண்டிருக்கிறது. அவசரநிலை பிரகடனத்தை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய ஒரே தலைவர் கருணாநிதிதான். ஆனால் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் இந்தியாவில் பல மாநிலங்களில் தற்போது நடந்து வருகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பேசும்போது, “இன்றைக்கு உள்ள கொடுங்கோல் ஆட்சி ஒருநாள் அகற்றப்படும். ஹிட்லர், முசோலினி இருந்தார்கள். அவர்கள் இறந்தபோது அந்நாட்டு மக்கள் நிம்மதி அடைந்தனர். அந்த நிம்மதியை மக்களிடத்தில் கொண்டுவர வேண்டும் என்றால் தீவிரமாக உழைக்கவேண்டும். நம் ஒற்றுமை அதற்கு நிச்சயம் வித்திடும். நாம் ஒன்றிணைந்து கரம் கோர்ப்போம். கொடுங்கோலாலர்கள் பிடியில் உள்ள பாசிச ஆட்சியை அகற்றுவோம்” என்றார்.

இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான், அமித்ஷா இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்கிறார்கள் பாஜக வட்டாரத்தில். எப்படியும் பாஜக எதிர்ப்பு அரசியல்தான் திமுக செய்யப் போகிறது. அங்கு போய் நாம் வேறு ஏன் மாட்டிக் கொண்டு தர்மசங்கடத்தை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அமித்ஷா வரவில்லை என்கிறார்கள் அவர்கள். 

Advertisement :
comments

Feedback