telescope-on-cyclone

telescope on cyclone

May 30 2018 08:55:07 AM

ஐரோப்பாவின் கொலம்பஸ் ஆய்வுக்கூடம் வின்வெளியில் ஏற்படும் புயல் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக மிக சக்தி வாய்ந்த டெலஸ்கோப் ஒன்றை நிறுவியுள்ளது.

கடந்த மாதம் தான் அதன் கட்டமைப்பு நிறைவடைந்து முழு செயல் பாட்டுக்கு வந்துள்ள நிலையில், அந்த புயல் வேட்டை டெலஸ்கோப்பில் இருந்து  முதல் புகைப்படம் கிடைத்துள்ளது. பூமியில் இருந்து சுமார் நானூறு கிலோமீட்டர் தொலைவில் இந்தோனேஷியாவின் சுமித்ரா தீவின் வான் பரப்பில் சர்வதேச  வின்வெளி ஆய்வு மையம் பயணித்தபோது,ஒரு மின்னல் ஏற்பட்டுள்ளது. அது ஒரு விண்வெளி புயலை ஒத்திருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த மின்னலின் ஒளிக்கற்றைகள் விண்வெளியின் மேலடுக்கு வரை பரவியுள்ளது. அதை இந்த டெலெஸ்கோப் மிக துல்லியமாக படம் பிடித்துள்ளது.

இந்த மின்னல் ஏற்பட்ட போது பல நூறு கிலோமீட்டர் தொலைவுக்கு எலெக்ரான்களோடு ஹைட்ரஜன் அணுக்கூறுகளும் வெளிப்பட்டுள்ளன. அவற்றையும் இந்த டெலெஸ்கோப் தெளிவாக படம் பிடித்துள்ளது. விண்வெளியில் ஏற்பட்ட மின்னல் மற்றும் இடி தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட புகைப்படங்களிலேயே இது மிக அரிய புகைப்படம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

துல்லிய புகைப்படம் மட்டுமல்லாது, ஏராளமான தகவல்களையும் சேகரித்துள்ளது இந்த டெலெஸ்கோப். இந்த புகைப்படத்தின் மூலம், இயற்கையின் மாபெரும் சக்தியான மின்னலில், ஒரு நொடியில் ஒரு லட்சம் அள்வீடுகள் மாறுவதை நாங்கள் கண்டுணர்ந்தோம் என்று சிலாகித்திருக்கிறார் டென்மார்க் தொழில்நுட்ப பல்கலைகழக ஒருங்கிணைப்பாளர் டார்ஸ்டன் நியூபர்ட். ஆயிரம் ஆயிரம் ஆச்சர்யங்கள் ஒளிந்திருக்கிறது விண்வெளியில். அதில் நாம் கண்டுபிடித்திருப்பது கோடியில் ஒன்று...

வீடியோ

Advertisement :
comments

Feedback